/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் பிரச்னைகள் ஏராளம் அதிகாரிகள் கள ஆய்வு செய்யணும்
/
தேசிய நெடுஞ்சாலையில் பிரச்னைகள் ஏராளம் அதிகாரிகள் கள ஆய்வு செய்யணும்
தேசிய நெடுஞ்சாலையில் பிரச்னைகள் ஏராளம் அதிகாரிகள் கள ஆய்வு செய்யணும்
தேசிய நெடுஞ்சாலையில் பிரச்னைகள் ஏராளம் அதிகாரிகள் கள ஆய்வு செய்யணும்
ADDED : மே 17, 2025 05:02 AM

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு பிரச்னைகள் தொடர்வதால், விபத்து அபாயத்துடன் வாகன ஓட்டுநர்கள் திக்திக் மனநிலையில் செல்ல வேண்டியுள்ளது.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் உள்ள, 'யு டேர்ன்' பகுதியில் விபத்தை தடுக்க ரோட்டின் இரு புறங்களிலும் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில், தாமரைக்குளம் பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடர்கள், தற்போது ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் இப்பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இதேபோன்று, கிணத்துக்கடவு முதல் ஆச்சிபட்டி வரை முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை ரோடு அருகே, கடைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அங்கு 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. 'பார்க்கிங்' செய்யப்பட்ட வாகனங்கள் எடுத்துச் செல்லும் போது, விபத்து ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள வழிகாட்டி மைல் கற்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் கிணத்துக்கடவு பகுதியில் அழிக்கப்பட்டுள்ளது. ரோட்டோர தடுப்பு பகுதியில் கழிவு கொட்டப்படுகிறது. மழை காலங்களில் குப்பை மீது தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
சர்வீஸ் ரோட்டின் ஓரம் தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில், அதிகளவு செடிகள் வளர்ந்துள்ளது. மேம்பால சுவற்றில் ஆங்காங்கே செடிகள் முளைக்க துவங்கியுள்ளது. இந்த செடிகள் வளர்வதற்கு முன்பாக வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், ரோட்டின் முக்கிய இடத்தில் சென்டர் மீடியங்களில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் ஆங்காங்கே எரிவதில்லை. இந்த பிரச்னைகள் தீர தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் கள ஆய்வில் ஈடுபட்டு, சரி செய்ய வேண்டும் என்பது, வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.