/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரெண்டு பக்கமும் தாறுமாறா இருக்கு ரோடு கடந்து போகவே தினமும் படாதபாடு
/
ரெண்டு பக்கமும் தாறுமாறா இருக்கு ரோடு கடந்து போகவே தினமும் படாதபாடு
ரெண்டு பக்கமும் தாறுமாறா இருக்கு ரோடு கடந்து போகவே தினமும் படாதபாடு
ரெண்டு பக்கமும் தாறுமாறா இருக்கு ரோடு கடந்து போகவே தினமும் படாதபாடு
ADDED : டிச 09, 2024 05:08 AM

பராமரிப்பு இல்லை
மாநகரில், 84வது வார்டு ஆல்வின் நகர் செம்மொழி பூங்கா பராமரிக்கப்படாமல் குப்பையால் நிறைந்துள்ளது. விஷ ஜந்துக்களின் அபாயம் உள்ளது. பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--ராம்குமார், ஆல்வின்நகர்.
அப்படியே இருக்கு
கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ஒரு மாதத்துக்கு முன் தோண்டப்பட்ட கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. கொசு உற்பத்தி அதிகமாகி, பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். விரைவில் சீரமைக்க வேண்டும்.
- -முருகானந்தம், கணபதி.
பயணத்தில் சிரமம்
வெள்ளக்கிணறு பிரிவிலிருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில், ரயில்வே கேட் ஒட்டி இருபுறமும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த இடத்தை கடக்க, மிகுந்த நேரம் ஆகிறது. இப்பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும். --
- கார்த்திக், கோவை
வந்தால் நல்லது
கோவைப்புதுார் பகுதியில், நகராட்சி வார்டு 89, 90ல், 24 மணி நேரம் தண்ணீர் விநியோகிக்க, 'அம்ருத்' திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்து, மூன்று ஆண்டுகள் ஆகிறது. திட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் உதவியாக இருக்கும்.
--பிரபாகரன், கோவைப்புதுார்.
இரவில் அச்சம்
பி.என்.புதுார் பொன்னுசாமி நகரில் (WZW40 SB18-W75-P13) தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இரவில் இப்பகுதியில் செல்வதற்கே அச்சமாக உள்ளது. -
-ரவி, பொன்னுசாமி நகர்.
நோய் பரவும் அபாயம்
கோவை நீலிகோணம்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பொதுக் கழிப்பிடம், நியாய விலை கடைக்கும் செல்லும் வழியில், குப்பை அதிகமாக கொட்டப்படுவதால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. -
-ஜெகநாதன், நீலிகோணாம்பாளையம்.
குண்டும் குழியுமாக
கோவை மாநகராட்சி 8வது வார்டு, நேருநகர் மேற்கு 8வது வீதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. புதிய சாலை அமைத்தால் நல்லது.
-நடராஜன், நேரு நகர்.
இருக்கு... ஆனா இல்லை!
கோவை மாநகராட்சி 38வது வார்டு தொண்டாமுத்துார் ரோடு குருசாமி நகரிலிருந்து பொம்மனம்பாளையம் பிரிவு வரை உள்ள மின் கம்பங்களில் எந்த மின் விளக்குகளும் எரிவதில்லை. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சண்முகம், பொம்மனம்பாளையம்.
நிரந்தர தீர்வு வேண்டும்
கோவை வார்டு எண் 19, அண்ணாநகர் கணபதி இரண்டாவது வீதியில் கடந்த அக்., மாதம் 13ம் தேதி கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அன்றைய தினமே, தற்காலிகமாக சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி அடைப்பை சரி செய்து கொடுத்தனர். இதுவரை நிரந்த தீர்வு ஏற்படுத்தவில்லை. இந்த பள்ளம், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- -சிவக்குமார், அண்ணாநகர்.
மக்களுக்கு சிரமம்
காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 9வது வீதியில், டாஸ்மாக் மதுக்கடை அருகில், பல மாதங்களாக, கழிவு நீர் வழிந்தோடுகிறது. மக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். பிரச்னையை சீரமைக்க வேண்டும். -
- கணேஷ், காந்திபுரம்.
காத்திருக்க முடியல
கோவை பேரூர் பிரதான சாலை செல்வபுரம் பகுதியில், மின்வாரியம் அலுவலகம் அருகில், பஸ் ஷெல்டர் கட்டவில்லை. பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் வெளியில் நின்று மிகவும் சிரமப்படுகின்றனர்.
- ஜெயபால், செல்வபுரம்.