/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ப்ராப்ளம்' தீர 'பார்முலா' இருக்கு
/
'ப்ராப்ளம்' தீர 'பார்முலா' இருக்கு
ADDED : பிப் 23, 2026 06:34 AM

''கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்னையை, உடனடியாக பெற்றோர், நண்பர்களிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்,'' என்கிறார், உளவியல் ஆலோசகர் அருள் வடிவு.
பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், ஆரோக்கியமான உணவு முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். காலையில் மிகவும் எளிதாக ஜீரணமாகும் இட்லி, உப்புமா, முளைகட்டிய பயிர், மதியம், நார் சத்துக்கள் அடங்கிய காய்கறிகள், கீரை வகைகள், முட்டை, இரவு இட்லி எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது டெக்னிக்கல் முறையில் படிக்க, 'SQWRRR' என்ற பார்முலா உள்ளது. சர்வேயிங், கொஸ்டினிங், ரைட்டிங், ரீட், ரீசைட், ரிவ்யூ ஆகும். இந்த பார்முலா முறையில் படித்தால், எளிதில் நினைவில் நிற்கும். முதலில் கேள்வி பதிலை உங்களுக்குள்ளே, விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இதை எல்லாம் படித்து விட்டோம் என சிறிய குறிப்பு எழுதி வைக்க வேண்டும்.
'ரீட்' என்பது, வாய் விட்டு சத்தமாக படிக்கும் போது, மனதில் ஆழமாக பதியும். 'ரீசைட்' என்பது, படித்ததை எழுதி பார்க்க வேண்டும். 'ரிவ்யூ' என்பது, உங்களுக்குள்ளே சொல்லி பார்க்க வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இம்முறையில் படித்தால், பாடங்கள் மனதில் நன்கு பதியும். இதை திரி 'ஆர்' டெக்னிக் என கூறுவர்.
மொபைல் போன், லேப்டாப், டிவி ஆகியவற்றை நீண்ட நேரம் பார்ப்பதால், கண் சோர்ந்து விடும். நமக்கு தெரியாமலே நம்மில் ஒரு சோம்பல் ஏற்படும் போது, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தொலைக்காட்சி, மொபைல் போன் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.
நம்மால் இதை சாதிக்க முடியும், படிக்க முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நேரத்தை கணக்கிட்டு தேர்வு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் பொதுத் தேர்வு மிகவும் எளிதாக இருக்கும். கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்னையை, உடனடியாக பெற்றோர், நண்பர்களிடம் தெரிவித்து இதற்கு தீர்வு காண வேண் டும். இவ்வாறு, அவர் கூறினார்.

