/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைய இருக்கு தன்னம்பிக்கை உதவிக்கு கொடுக்கலாமே ‛'கை'
/
நிறைய இருக்கு தன்னம்பிக்கை உதவிக்கு கொடுக்கலாமே ‛'கை'
நிறைய இருக்கு தன்னம்பிக்கை உதவிக்கு கொடுக்கலாமே ‛'கை'
நிறைய இருக்கு தன்னம்பிக்கை உதவிக்கு கொடுக்கலாமே ‛'கை'
ADDED : அக் 04, 2025 11:33 PM

உ ழைக்க வேண்டும். உயர்வு தருகிறதோ இல்லையோ... நமக்கு தெரிந்த வேலையை முழு அர்ப்பணிப்போடு செய்தால், நிம்மதியை தேடி அலைய வேண்டாம்.
இதை சொல்பவர், குனியமுத்துார் இடையர்பாளையத்தை சேர்ந்த, 70 வயதான கருப்பசாமி. சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில், காலணி தைத்து கொடுக்கும் பணி செய்கிறார்.
''அங்க பாருங்க... அங்கதான் உட்கார்ந்து தொழிலை கவனிச்சுட்டு வந்தேன்,'' என்று அவர் காண்பித்த இடம், பலகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய கடை.
பல ஆண்டுகளுக்கு முன், பெட்டிக் கடை வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதுவும் தகர்ந்து போனது. பின், பலகைகள் கொண்டு இவரே உருவாக்கிய கடையில் அமர்ந்தார். அதுவும், சில காலங்கள் மட்டுமே தாங்கியது. இப்போது வெட்ட வெளிதான் இவருக்கு முகவரி.
உங்களுக்கு வாழ்க்கை தந்த கடை உடைந்து போனது; என்ன நினைக்கிறீர்கள்?
அத பாக்க, பாக்க ரொம்ப வருத்தமா இருக்குங்க. யார் கிட்ட உதவி கேக்குறதுன்னே தெரியலேங்க. பாருங்க... ஆயுத பூஜை கூட போட முடியாம போயிருச்சு. மரத்தடியில் உக்காந்துட்டு தொழில் பண்ணிட்டு இருக்கேன். அந்த பெட்டிய பாக்கும் போது, எப்படியும் ரெடி பண்ணிடனும்னு நெனச்சுக்கிட்டே இருக்கேன். ஆனா, வாய்க்கும் வயித்துக்குமே சரியா இருக்கு.
நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா?
நான் தொழில் செய்யறதுக்கு, பெட்டிக்கடை கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும். அது தான் எப்பவுமே மனசுல ஓடிட்டே இருக்கு. மழை காலங்கள்ல கொட பிடிச்சிட்டு வேலை செய்யறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும், கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். ரெண்டு பசங்க, அவங்க வேலைய பாத்துக்குறாங்க. உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் உழைப்பேன்.
உழைப்பின் தாகத்தை, இன்னும் அவரது கண்களில் காண முடிகிறது. இவரது பெட்டிக்கடை ஆசையை நிறைவேற்றி வைக்க, ஈர நெஞ்சம் உள்ளவர்கள், 97872 61749 என்ற எண்ணில் அழைத்து உதவலாமே!