/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் இருக்கு; ஆனாலும் திறந்தவெளியில் அத்துமீறல்
/
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் இருக்கு; ஆனாலும் திறந்தவெளியில் அத்துமீறல்
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் இருக்கு; ஆனாலும் திறந்தவெளியில் அத்துமீறல்
பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் இருக்கு; ஆனாலும் திறந்தவெளியில் அத்துமீறல்
ADDED : டிச 01, 2024 10:52 PM

ரோடு பணி நிறுத்தம்
கிணத்துக்கடவு, அண்ணாநகர் முதல் மற்றும் இரண்டாவது தெருவில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன், ரோடு சீரமைப்பு பணி துவங்கியது. ஆனால், பாதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக ரோடு பணியை முடிக்க வேண்டும்.
-- -ராஜா, கிணத்துக்கடவு.
ரோடு சேதம்
பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் பிரிவு முதல் நாட்டுக்கல்பாளையம் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்லவும் சிரமமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- -அந்தோனி, பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளில், வாகன ஓட்டுநர்கள் சிலர் விதிமுறையை பின்பற்றாமல் 'ஒன்வே' திசையில் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே, போலீசார் இதை கவனித்து விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -மணிகண்டன், பொள்ளாச்சி.
கால்நடைகளால் தொல்லை
வால்பாறை நகரில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில், கால்நடைகள் ரோட்டில் உலா வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, கால்நடைகளை ரோட்டில் விடுபவர்கள் மீது, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -விகாஸ், வால்பாறை.
நாறுது பஸ் ஸ்டாண்ட்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் கழிப்பிட வசதி இருந்தும், பொதுமக்கள் சிலர் மற்றும் பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் திறந்தவெளியை பயன்படுத்துவதால், பஸ் ஸ்டாண்டில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுச்சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-- -கிருஷ்ணன், பொள்ளாச்சி.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மற்ற பஸ்கள், கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது.
- வானதி, உடுமலை.
பஸ்களுக்கு இடையூறு
உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளே பஸ்களுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பயணியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவராமன், உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன் உள்ள சாக்கடை கால்வாய், திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறி வருகிறது. அப்பகுதியில் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்படுவதும், பள்ளியின் சுற்றுசுவரில் சிறுநீர் கழிப்பதும் நடக்கிறது. இதனால் பள்ளியின் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னையால் பள்ளியிலும் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது.
- ஜெயசீலன், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை, தாராபுரம் ரோடு, வாசவி நகர் சந்திப்பில் வாகனங்கள் சரமாரியாக வருவதால், விபத்துகள் அதிகம் நடக்கிறது. அப்பகுதியில் அனைத்து பக்கமிருந்தும் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் ரோட்டை கடப்பதற்கு பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். விபத்துகளை கட்டுபடுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.
- விஷ்ணுகுமார், உடுமலை.
பள்ளத்தால் பாதிப்பு
உடுமலை நகராட்சி வி.ஜி., ராவ் நகரில் பாதாளச்சாக்கடை சரி செய்வதற்காக தோண்டி போடப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிவடையாமல் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். நகராட்சியினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.