/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் சேவை மையம் இல்லை; அவதிக்குள்ளாகும் மக்கள்
/
ஆதார் சேவை மையம் இல்லை; அவதிக்குள்ளாகும் மக்கள்
ADDED : ஜூலை 30, 2025 08:21 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் ஆதார் சேவை மையம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள், புதிய ஆதார் மற்றும் ஆதாரில் உள்ள முகவரி, பெயர், மொபைல்போன் எண் உள்ளிட்டவைகளை திருத்தம் செய்ய கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில் இ-சேவை மையத்தில் உள்ள ஆதார் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கடந்த, ஏழு மாதங்களாக இந்த ஆதார் சேவை மையம் செயல்படாமல் உள்ளது. மேலும், கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் மற்றும் பேங்க் ஆப் பரோடாவில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையங்களும் இல்லாததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தும் ஆதார் சேவை வழங்க அரசு தாமதப்படுத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கூறியதாவது:
இ-சேவை மையத்தில் உள்ள ஆதார் சேவை பிரிவில் பணியாளர்கள் இல்லாததால், ஏழு மாதங்களாக ஆதார் சேவை கிணத்துக்கடவு பகுதியில் இல்லை. மேலும், ஆதார் சேவை பெற பொள்ளாச்சி போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு காலை 8:00 மணி முதல் வரிசையில் மக்கள் நிற்பதால், கிணத்துக்கடவில் இருந்து காலை 7:00 மணிக்கு கிளம்ப வேண்டியுள்ளது.
கிணத்துக்கடவில் ஒரு ஆதார் சேவை மையம் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அலைமோது கின்றனர். எனவே, மக்கள் பயன் பெரும் வகையில் ஆதார் சேவையை துவங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.