/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கொட்ட இடமில்லை: தரம் பிரிக்க வழியில்லை.. நீர் நிலைகளில் குவிப்பதால் மாசு
/
குப்பை கொட்ட இடமில்லை: தரம் பிரிக்க வழியில்லை.. நீர் நிலைகளில் குவிப்பதால் மாசு
குப்பை கொட்ட இடமில்லை: தரம் பிரிக்க வழியில்லை.. நீர் நிலைகளில் குவிப்பதால் மாசு
குப்பை கொட்ட இடமில்லை: தரம் பிரிக்க வழியில்லை.. நீர் நிலைகளில் குவிப்பதால் மாசு
ADDED : ஜூன் 08, 2025 10:23 PM

அன்னுார்; குப்பை கொட்டுவதற்கும், தரம் பிரிக்கவும், இடம் இல்லாததால், பேரூராட்சி நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு செல்லலுார், அல்லிகுளம், நாகமாபுதுார், சொக்கம்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன.
பேரூராட்சியில், நிரந்தர பணியாளர், தற்காலிக பணியாளர், ஒப்பந்த பணியாளர் என 110 பேர் தினமும் குப்பைகளை சேகரிக்கின்றனர். தினமும் 10 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிப்பதற்கு இட வசதி இல்லை. இதற்காக பேரூராட்சியால் பெறப்பட்ட நான்கு ஏக்கர் நிலம் விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் கோர்ட் உத்தரவால் முடங்கி கிடக்கிறது.
இதனால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் கிடைக்காமல், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னுார் குளத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கொட்டப்படுகிறது.
குமாரபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட இட வசதி உள்ள சில வார்டுகளில் மட்டும் அந்த வார்டில் சேகரித்த குப்பைகள் கொட்டி தரம் பிரிக்கப்படுகிறது.
எனினும் 90 சதவீத குப்பைகள் தரம் பிரிக்கப்படாமலேயே மலை போல் குவிந்து வருகின்றன.
இதனால், சுகாதார கேடு ஏற்படுத்துகிறது. தரம் பிரிக்க கொட்டகை இல்லாததால் தொழிலாளர்கள் கடும் வெயிலில் நின்றபடி பணிபுரிய வேண்டி உள்ளது. சமூகவிரோதிகள் சிலர் குப்பைகளுக்கு தீ வைக்கின்றனர். புகை மூட்டம் ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் அன்னுார் பேரூராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் மக்கும் கழிவுகளையும் தனித்தனியாக பிரிக்கவும் உரம் தயாரிக்கவும் இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இடம் ஒதுக்காததால் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றில் சேகரமாகும், பெரிய அளவிலான குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் பெறுவதற்கு தாமதப்படுத்துகிறது.
வீடுகளில் தரப்படும் குப்பைகளை மட்டும் தினமும் பெற்று செல்கின்றனர். தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகே வருகின்றனர். அதுவரை குப்பைகளை வைத்திருக்க வேண்டி உள்ளது. சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அரசு இடம் ஒதுக்க வேண்டும்,'' என்றனர்.