UPDATED : அக் 07, 2026 03:19 AM
ADDED : அக் 06, 2026 04:44 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் மழை பொழிவு இல்லாததால், தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னைக்கு அடுத்த படியாக காய்கறி மற்றும் வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யும் காய்கறிகளை தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 500, தேங்காய் (ஒன்று) - -- 30, கத்திரிக்காய் கிலோ - 56, முருங்கைக்காய் --- 50, வெண்டைக்காய் --- 45 முதல் 65, முள்ளங்கி --- 27, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் --- 65, புடலை --- 55, சுரைக்காய் --- 30, பீர்க்கங்காய் --- 65, வெள்ளரிக்காய் --- 35, அவரைக்காய் ---- 85, பீட்ரூட் --- 30, மற்றும் பச்சை மிளகாய் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று முருங்கைக்காய் கிலோ - 10, அவரைக்காய் -- 35 மற்றும் பீட்ரூட் --- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதே போன்று, தக்காளி (15 கிலோ) --- 50, முள்ளங்கி கிலோ --- 7, அரசாணிக்காய் --- 3, புடலை --- 15, வெள்ளரிக்காய் --- 2, சுரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று மட்டும், 100 பெட்டி தக்காளி மற்றும் பிற காய்கறிகள் தலா, 200 முதல் 300 கிலோ வரை வரத்து இருந்தது. மழை இல்லாததால் கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து குறைவாகவே இருக்கிறது,' என்றனர்.
