/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடையில் கழிப்பிட வசதியில்லை : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
ரேஷன் கடையில் கழிப்பிட வசதியில்லை : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரேஷன் கடையில் கழிப்பிட வசதியில்லை : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரேஷன் கடையில் கழிப்பிட வசதியில்லை : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : நவ 25, 2025 05:39 AM

பொள்ளாச்சி: 'சங்கம்பாளையம் ரேஷன் கடையில், கழிப்பிட வசதியில்லாததால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்,' என, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஆச்சிப்பட்டி கிளை மா.கம்யூ. கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சங்கம்பாளையம் ரேஷன் கடையில் வேலை செய்யும் ஊழியருக்கு, அரசின் சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் போதிய தண்ணீர் வசதியில்லாததால், பயன்பாட்டுக்கு வரவில்லை. போதிய வசதி ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ஆச்சிப்பட்டி ஐந்தாவது வார்டு குழந்தைகள் சத்துணவு மையத்தில், மின் கட்டணம் செலுத்தாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் சத்துணவு மையத்துக்கு மின் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சங்கம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழை நீர் தேங்காமல் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லுாத்துக்குளி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் மதுரைவீரன் கோவில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், சாலை விரிவாக்கம் பணிக்காக கோவில் அகற்றப்பட்டு சுவாமி சிலைகள் ஊருக்குள் வைத்து பூஜை செய்து வருகிறோம்.
தனிநபர் கொடுத்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்றன. தற்போது வேலைகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், வேறு இடத்தில் கோவில் கட்ட சிலர் முடிவு செய்துள்ளனர். எனவே, கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வலியுறுத்தியுள்ளனர்.

