/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூங்காக்கள் இல்லாத வார்டே இல்லை மோசமான பராமரிப்பு தான் தொல்லை
/
பூங்காக்கள் இல்லாத வார்டே இல்லை மோசமான பராமரிப்பு தான் தொல்லை
பூங்காக்கள் இல்லாத வார்டே இல்லை மோசமான பராமரிப்பு தான் தொல்லை
பூங்காக்கள் இல்லாத வார்டே இல்லை மோசமான பராமரிப்பு தான் தொல்லை
UPDATED : பிப் 21, 2026 08:01 AM
ADDED : பிப் 21, 2026 07:40 AM

கோவை: கோவையில் 412 பூங்காக்கள் உள்ளன. பூங்கா இல்லாத வார்டு இல்லை. ஆனால், பெரும்பாலான பூங்காக்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது.
கடந்தாண்டு 376 பூங்காக்களை பராமரிக்க ரூ.6.63 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்னாச்சு என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம். பராமரிப்பு செலவு எழுதி, பணம் யாருக்கோ போயிருக்கலாம். எந்த வேலையும் நடந்ததாக பூங்காவுக்கு வழக்கமாக வரும் மக்கள் சொல்லவில்லை.
ஒன்றிரண்டு தவிர எல்லா பூங்காவும் புதர்மண்டி காணப்படுகிறது. சிறுவர்கள் விளையாடும் சாதனங்கள் உடைந்துள்ளன. கழிப்பறைகளின் அருகில் கூட செல்ல முடியாதபடி துர்நாற்றம்.
காவலாளி கிடையாது. மரங்களையே முழுசாக வெட்டி எடுத்து செல்கின்றனர் திருடர்கள். காந்திமாநகர் பூங்காவில் நாலைந்து பெரிய சந்தன மரங்கள் மின்சார ரம்பத்தால் அறுக்கப்பட்டு, லாரியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். வழக்கு என்ன ஆயிற்று என்று தெரியாது.
நகர சாலைகளின் மேடு பள்ளம், போக்குவரத்து, குறைவில்லாத தூசிக்கு பயந்து, பூங்காவில் வாக்கிங் செல்ல நிறைய பேர் வருகின்றனர். அவர்களுக்கான நடைபாதை அமைத்து பத்தாண்டுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் ஸ்லாப் உடைந்து பள்ளம். அல்லது மேடு. முதியவர்கள் தடுமாறி விழுவது சகஜமான காட்சி.
மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபாலன், இதை சுட்டிக் காட்டினார். செம்மொழி பூங்கா போல் எல்லா பூங்காக்களையும் பராமரிக்க வேண்டும் என்று கேட்டார். மேயரும் கமிஷனரும் புன்னகை மாறாமல் கேட்டு கொண்டிருந்தனர்.
எங்காவது ஒரு பூங்கா நல்லபடி பரமரிக்கப்படுகிறது என்றால், அதை தினமும் பயன்படுத்தும் ஆர்வலர்களே காரணமாக இருப்பார்கள். முதுமையிலும் சமூக சேவையில் நாட்டம் கொண்ட அவர்களால் தான் பொதுமக்கள் பூங்காவுக்கு வருவது தொடர்கிறது. பராமரிப்பு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்கு போகிறது என்பதை அவர்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
”பராமரிப்பை கண்காணிக்க சிறப்புக்குழு ஏற்படுத்த வேண்டும். வேலை திருப்தியாக இல்லை என்றால், அதற்கான செலவு தொகை வழங்க கூடாது. ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று ஒவ்வொரு குறைதீர்ப்பு கூட்டத்திலும் அவர்கள் மனு கொடுக்கின்றனர். அவை ஒரே இடத்தை சென்று சேர்கின்றன. அதோடு சரி.
மத்திய அரசின் அம்ருத் - மித்ரா திட்டத்தில் நிதி பெற்று, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக 10 பூங்காக்களை பராமரிக்க போவதாக மாநகராட்சி சொல்கிறது. அது விடியலின் தொடக்கமாக இருக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.
மரங்களையே முழுசாக வெட்டி எடுத்து செல்கின்றனர் திருடர்கள். காந்திமாநகர் பூங்காவில் நாலைந்து பெரிய சந்தன மரங்கள் மின்சார ரம்பத்தால் அறுக்கப்பட்டு, லாரியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். வழக்கு என்ன ஆயிற்று என்று தெரியாது.

