UPDATED : நவ 29, 2026 10:00 PM
ADDED : நவ 29, 2026 10:00 PM
கோவை: மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக சித்திரைச்சாவடி தடுப்பணை அருகே நொய்யல் ஆற்றுப்படுகையின் கிழக்கிலும் மேற்கிலும் கோபுரங்கள் அமைப்பதற்காக ஏற்பாடுகளை மின்வாரியத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த மின் கோபுரங்களால் ஆற்றின் அகலம் குறையும். குறைக்கப்பட்டால் வெள்ளஅபாயம் ஏற்படும். அத்துடன் நொய்யல் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்நாடியான விளை நிலங்கள் விபரீதவிளைவுகளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாதம்பட்டி முதல் நல்லுார்வயல் அமைந்துள்ள காருண்யா வரை உயர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கு ஏதுவாக பல மாற்று வழிகள் உள்ளன. அதை பயன்படுத்தி மாற்றுப்பாதையில் அத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் மின்வாரியமும் முன்வர வேண்டும் என்று கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.
