/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன்குன்றில் இன்று தேர்த்திருவிழா துவக்கம்
/
குமரன்குன்றில் இன்று தேர்த்திருவிழா துவக்கம்
ADDED : பிப் 04, 2025 12:18 AM
அன்னுார்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது.
இன்று இரவு 8:00 மணிக்கு, கிராம சாந்தி, பலி பீட பூஜை, கலச பூஜை, வேள்வி , நாளை (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 9ம் தேதி வரை, தினமும் காலையில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 10ம் தேதி காலை சுவாமி திருவீதி உலாவும், இரவு 10:00 மணிக்கு அம்மன் அழைப்பும் நடக்கிறது. வருகிற 11ம் தேதி காலை 7:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.
மடாதிபதிகள், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் 12ம் தேதி காலை பஜனையும், கோவில் வளாகத்தில் காவடி செலுத்துவதும், அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடக்கிறது. வரும் 13ம் தேதி இரவு பரிவேட்டையும், 14 ம் தேதி இரவு தெப்போற்சவமும் நடக்கிறது.