ADDED : ஆக 30, 2026 03:10 PM

கோவை: குன்னுார் தேயிலை வாரியம் சார்பில் புரூக்பீல்ட்ஸ் மாலில், ‘ டீ அனுபவம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. டீ எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன், தலைவர் மற்றும் கிரிஸ்டல் டீ இயக்குனர் தீபக் ஷா துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக டீ டிரேடர்ஸ் அசோசியேஷன் ஆப் கோவை அண்டு கொச்சின் நிர்வாக இயக்குனர் நுார் முகமது, பாராமவுண்ட் டி மார்க்கெட்டிங் கம்பெனி நிர்வாக இயக்குநர் ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
தென்னிந்தியாவின் பல தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளின் பிரதிநிதிகள் தங்கள் தேயிலை தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அனைத்து பார்வையாளர்களுக்கும் தேயிலைப் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை அக்ரி இன்குபேஷன் சென்டரை சேர்ந்த பிரபாகரன், டீ டிரேடர்ஸ் அசோசியேஷன் ஆப் கோவை கிளை மேலாளர், தேயிலை வாரியத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
