/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடுகளுடன் வந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்
/
மாடுகளுடன் வந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்
ADDED : நவ 27, 2024 10:15 PM

தொண்டாமுத்தூர்; ஆலாந்துறையில், உறவினர்களிடையே ஏற்பட்ட வழித்தட பிரச்னையில், சோலார் பேனலை அகற்றியதால்,மாடுகளுடன் வந்து பெண், போலீசில் புகார் அளித்தார்.
ஆலாந்துறை அடுத்த நாதேகவுண்டன்புதூர், செங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் அண்ணபூரணி,57. இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு செந்தமான இடத்திற்கு அருகில் உள்ள ஆனந்தகுமார், ருத்ரா உள்ளிட்ட 8 பேர், தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைத்து, சுமார், 5 அடி ஆழத்திற்கு, மண் தோண்டி எடுத்து, கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாகவும், சோலார் பேனலை அகற்றி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஆலாந்துறை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பின், சோலார் பேனலை அகற்றியதால், மோட்டார் இயங்கவில்லை இதனால் மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை என, மாடுகளை கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மரத்தின் கீழ் கட்டினார். அதேபோல, ருத்ரா, என்பவர், தங்களுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து, அன்னபூரணி மற்றும் அவரது மகன்கள் என, 5 பேர் சேர்ந்து, தன்னை அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் இருதரப்பினரையும், அழைத்து விசாரணை மேற்கொண்டு, இருதரப்பினரும், உரிய ஆவணங்களுடன் இன்று மீண்டும், விசாரணைக்கு வரவேண்டும் என, அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,இரு தரப்பினரும், உறவினர்கள். இவர்கள் இடம், அடுத்தடுத்து உள்ளதால், வழித்தடத்தில் இருதரப்பினருக்கும் பிரச்னை உள்ளது. உரிய ஆவணங்களை கொண்டுவர இருதரப்பினருக்கும் தெரிவித்துள்ளோம்,என்றனர்.