/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுஅறிவுக்கு அச்சாரமிடும் 'தினமலர் - பட்டம்' இதழ்; பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
பொதுஅறிவுக்கு அச்சாரமிடும் 'தினமலர் - பட்டம்' இதழ்; பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அபாரம்
பொதுஅறிவுக்கு அச்சாரமிடும் 'தினமலர் - பட்டம்' இதழ்; பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அபாரம்
பொதுஅறிவுக்கு அச்சாரமிடும் 'தினமலர் - பட்டம்' இதழ்; பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : ஜன 07, 2025 06:44 AM

பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி, பல்லடம் ரோடு, பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.
இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், மெகா வினாடி -- வினா போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான, வினாடி --- வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சார்பில், பொள்ளாச்சி, பல்லடம் ரோடு, பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி இணைந்து உள்ளது.
பள்ளியில், நேற்று நடந்த போட்டியில், 210 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து, இறுதிச் சுற்று போட்டி நடந்தது. மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'இ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் சர்வேஷ், ஸ்ரீராம் ஜோடி வென்றது.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் அப்புகுட்டி, முதல்வர் மகேஸ் கே. நாராயணன், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, ஆசிரியர் சுகன்யா ஆகியோர் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதி போட்டியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.
அரிய தகவல்கள்
பள்ளி முதல்வர் மகேஸ் கே. நாராயணன் கூறுகையில்:'தினமலர் - பட்டம்' இதழ், பொதுஅறிவு தேடலை பூர்த்தி செய்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களிடையிலும் வாசிப்பு பழக்கத்தைத் துாண்டுகிறது. அறிவியல் உட்பட அறிவுச்சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. அரிய தகவல்களை 'பட்டம்' இதழ் வாயிலாக பெருமளவு அறிந்து கொள்ள முடிகிறது. மாணவ, மாணவியர் பலரும் 'பட்டம்' இதழ் படிக்க முனைப்பு காட்டுகின்றனர்.