/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : நவ 09, 2024 12:38 AM

கோவை ; கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கந்தர்சஷ்டி விழா கடந்த நவ., 2 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமானுக்கு 12 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோட்டை கரிவரதராஜ பெருமாள் மற்றும் கோனியம்மன் கோவிலிலிருந்து திருமண சீர் வரிசைகள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு திருக்கல்யணா வைபவம் நடந்தது. மாலைமாற்றும் வைபவம், தேங்காய் உருட்டும் நிகழ்வு என்று பாரம்பரியமும், கலாசாரமும் மாறாமல் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்புமாக பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
நிறைவாக பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து பரிமாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்பு பக்தர்கள் திருக்கல்யாண மொய் சமர்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களது சக்திக்கேற்ற மொய்ப்பணம் சமர்பித்து நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர்.
இதே போன்று சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். ஈச்சனாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில் (கச்சியப்பர் மடாலயம்), குனியமுத்தூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கோவில்பாளையம் காளகாலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தன.