/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக நிறுவனங்களில் திருக்குறள்; தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
/
வணிக நிறுவனங்களில் திருக்குறள்; தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
வணிக நிறுவனங்களில் திருக்குறள்; தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
வணிக நிறுவனங்களில் திருக்குறள்; தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
ADDED : மே 14, 2025 11:57 PM
கோவை; கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தமிழில் திருக்குறள், விளக்க உரை எழுதப்பட வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை தொழிலாளர் உதவி கமிஷனர்(அமலாக்கம்) சுபாஷ்சந்திரன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு டிச., 31ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில், 'தனியார் நிறுவனங்களில் திருக்குறளும், உரையும் எழுதுவது' குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தினம் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில், பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெற, காட்சிப்படுத்த வேண்டும்.
அனைத்து தனியார் நிறுவனங்களிலும், திருக்குறளும், விளக்க உரையும் எழுதுவதை ஊக்குவிக்க, சிறப்பு மதிப்பெண்கள் இனி வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.