/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்லாண்டி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
/
செல்லாண்டி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
செல்லாண்டி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
செல்லாண்டி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : நவ 01, 2025 12:05 AM
நெகமம்: நெகமம், கொண்டேகவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கருமாபுரம்புதூர் செல்லாண்டியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா, நேற்று துவங்கியது. இதில், முளைப்பாரி எடுத்து வருதல், திருவிளக்கு, பிள்ளையார், திருமகள் வழிபாடு, முதற்கால வேள்வி நடந்தது.
இன்று 1ம் தேதி, காலையில் திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலையில், மூன்றாம் கால வேள்வி நடக்கிறது.
வரும், 2ம் தேதி காலை 5:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி, 7:30 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல் நடக்கிறது. காலை 8:30 மணிக்கு, விமானம் கலசத்துக்கு திருக்குட நன்னீராட்டும், விநாயகர் மற்றும் மாகாளியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டும் நடக்கிறது. தொடர்ந்து பதிமங்கள காட்சி, பெருந்திருமஞ்சனம், திருமுறை விண்ணப்பம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

