/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம் இளம் படைப்பாளிகளுக்கு விருது
/
திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம் இளம் படைப்பாளிகளுக்கு விருது
திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம் இளம் படைப்பாளிகளுக்கு விருது
திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம் இளம் படைப்பாளிகளுக்கு விருது
ADDED : ஜன 16, 2025 11:47 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில், திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையத்தில் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் ரவி வாமனன் முன்னிலை வகித்தார். அமைப்பின் நிறுவனர் அம்சப்ரியா, இதுவரை அறிவுச்சோலை செய்த பணிகள் குறித்து விளக்கினார். அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். அமைப்பின்நோக்கம் குறித்து அமைப்பின் இணை நிறுவனர் ராமலிங்கம் பேசினார்.
வேப்பமரத்துவீடு கருப்புசாமி, வள்ளியம்மாள் குடும்பத்தினர் சார்பில், சமூகப்பற்றாளர் விருதினை, பொள்ளாச்சி அருண்பாலாஜி செல்வராஜ்,இளம்படைப்பாளிகளுக்கான படைப்பூக்க விருதினை நருன், சபரிகிரிக்கும்விருதுகளை எழுத்தாளர் ரமேஷ்குமார் வழங்கினார்.
மேலும், 1,330 திருக்குறளையும் பார்த்து எழுதிய 45 மாணவர்களுக்குதிருக்குறள் ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள், சான்றிதழ், ரொக்கப்பரிசு நுாறு ரூபாய் எனகம்பன் கலை மன்றத்தின் தலைவர் சண்முகம், எழுத்தாளர் செந்தில், ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் வழங்கினர்.மேலும் 1,330 குறள்களுக்கும் குறைவாக எழுதியிருந்தவர்களுக்கு பரிசுகளை சேவாலயம் நிர்வாகிகள் ஞானசேகர், அறவொளி ஆகியோர் வழங்கினர்
மாணவர்களின் ஓவியக் கண்காட்சியினை கவிஞர் காளிமுத்து திறந்து வைத்தார். சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள், மற்றும் ரொக்கப்பரிசுகளை ஏரிப்பட்டி ஆசிரியர் கீதா, உமா அறவொளி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்களுக்கு விருது, பரிசுகளை ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி கோவிந்தராஜ், சோழ நிலா , மற்றும் சபரிகண்ணன் ஆகியோர் வழங்கினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞர் காளிமுத்து, அமைப்பின் நிர்வாகிகள் ஆனந்தன் காளிங்கராஜ், கலை அரசு, கமலேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்விழாவில், திருக்குறள் எழுதி விருது பெற்ற பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளி மாணவர்கள் ஏழு பேரும், நேராக பள்ளிக்கு வந்து பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக வைத்து வணங்கி வழிபட்டனர்.
ஜோதி நகர் படிகள் படிப்பகத்தில் 26 ஆவது நிகழ்வாக திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு மாணவர்கள் பங்கேற்றனர்.அதில், 1,330 குறள் எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கல்வி உபகரணங்கள், வாய்ப்பாடு அகராதி போன்றவை வழங்கப்பட்டது.
கொலுசு நிறுவனர் அறவொளி ஐயா தலைமை வகித்தார். படிகள் படிப்பக நிறுவனர் ஜெயக்குமார் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.ஆவல்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் காளிமுத்து பங்கேற்றார். படிகள் பதிப்பக நிறுவனர் பூங்கொடி நன்றி கூறினார். இந்நிகழ்வில் அறிவொளி வீராசாமி, குழந்தைப் பாடல்களை பாடினார்.
உடுமலை
உடுமலையில், திருவள்ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில், திருவள்ளுவர் தின விழா நடந்தது. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதனையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நடந்த, திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி எம்.பி.,ஈஸ்வரசாமி, திருவள்ளுவர் திருக்கோட்ட செயாளர் சிவக்குமார், இணைச்செயலாளர்கள் ராபின், அருள்கணேசன், துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜாசுந்தரம், தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள் ஹேனா ஷெர்லி, விஜயலட்சுமி, மகேஷ்வரி, நர்மதா, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர் வீரய்யன் , ஓவிய ஆசிரியர் மயில்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.