/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம் விலை உயர இதுதான் காரணம்!
/
தங்கம் விலை உயர இதுதான் காரணம்!
ADDED : அக் 09, 2024 10:48 PM

கோவை : தங்க ஆபரணங்களின் விலை, அபரிமிதமாக உயர்ந்து வருவது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் உயரும் என்று கூறுகின்றனர் வியாபாரிகள். தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாத் கூறியதாவது:
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போர், ரஷ்யா -- உக்ரைன் போர் -இவை இரண்டிலுமே, இதுவரை எந்தவொரு சமாதான உடன்படிக்கையோ, போர் நிறுத்தமோ ஏற்படவில்லை. அதனால் பல நாடுகளில், ஒட்டு மொத்த வர்த்தகமே முடங்கி உள்ளது.
அமெரிக்காவில் நலிவடைந்திருந்த பொருளாதாரம், படிப்படியாக புத்துயிர் பெற்று வருகிறது. அமெரிக்க பெடரலில் நடந்த கூட்டத்தில், தொடர் மற்றும் நிரந்தர வைப்புநிதி மற்றும் சேமிப்பு நிதிக்கு, வட்டி விகிதத்தை குறைத்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வட்டி விகிதம் குறைந்ததால், அமெரிக்கர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத்துவங்கிவிட்டனர். தங்கத்திற்கு, சர்வதேச அளவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
விலை கடுமையாக உயர, இதுவே காரணம். இப்போதைக்கு குறைய வாய்ப்புகளே இல்லை. ஒற்றை இலக்கத்தில் குறைந்தால், இரட்டை இலக்கத்தில் உயரும்.
இவ்வாறு, சபரிநாத் கூறினார்.

