/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைபர் மோசடியில் சிக்கினால் செய்ய வேண்டியது இதுதான்
/
சைபர் மோசடியில் சிக்கினால் செய்ய வேண்டியது இதுதான்
சைபர் மோசடியில் சிக்கினால் செய்ய வேண்டியது இதுதான்
சைபர் மோசடியில் சிக்கினால் செய்ய வேண்டியது இதுதான்
ADDED : டிச 10, 2025 08:26 AM
மேட்டுப்பாளையம்: -: சைபர் மோசடியில் சி க்கினால், உடனே என்.சி.ஆர்.பி., போர்டலில் புகார் பதிவு செய்ய வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அழகு ராஜா கூறியதாவது:-
சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக, பொதுமக்கள் இடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. டிஜிட்டல் அரஸ்ட் என்பது குறைந்துள்ளது. சைபர் புகாரில் பணத்தை இழந்தால், மேற்கொண்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோகாமல் இருக்க, உடனடியாக 1930 க்கு அழைத்து புகார் அளிக்க வேண்டும். பின், என்.சி.ஆர்.பி., போர்டலில் புகார் பதிவு செய்ய வேண்டும். இதனால் உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டு, பணம் மேலும் பறிபோகாமல் தடுக்கப்படும். ஏ.ஐ., டெக்னாலாஜி வாயிலாக, சிலர் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துக்கின்றனர்.
வராத வனவிலங்குகள் ஊருக்குள் வந்தது போல் பதற்றம் அடையும் வகையில், புகைப்படங்களை பதிவிடக்கூடாது; இது தவறு. இவ்வாறு, அவர் கூறினார்.----

