/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்ன மாதிரி ஆடைனாலும் இந்த நகைகள் வேற மாதிரி லுக் தரும்
/
என்ன மாதிரி ஆடைனாலும் இந்த நகைகள் வேற மாதிரி லுக் தரும்
என்ன மாதிரி ஆடைனாலும் இந்த நகைகள் வேற மாதிரி லுக் தரும்
என்ன மாதிரி ஆடைனாலும் இந்த நகைகள் வேற மாதிரி லுக் தரும்
ADDED : அக் 17, 2024 11:42 PM

ஆன்லைனில்அலசியோ, கடை கடையா ஏறி இறங்கியோ இந்த ஆடைகளை கூட வாங்கிவிடலாம். அதுக்கு மேட்சா கம்மல், வளையல் வாங்கிறக்குள்ள நாங்க படுற பாடிருக்கே. குழப்பமே வேண்டாம், கேர்ள்ஸ்.இப்போது டிரெண்டிங்கில் உள்ள நகைகளை தெரிந்தால், உங்கள் ஆடைக்கேற்ற அணிகலனை எளிதாக தேர்வு செய்யலாம்.
கிளாசிக் காதல்
புதிய ஜூவல்லரி டிரெண்டுகள் எத்தனை வந்தாலும், கிளாசிக் நகைகள் மீதான காதல் குறைவதில்லை. இந்த 2024ல், மார்டன் டிவிஸ்டில் உருவாக்கப்படும் கிளாசிக் நகைகள், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சேலைகள், லெகங்கா போன்ற டிரெடிசன் ஆடைகளுக்கு இந்த கிளாசிக் நகைகள் மேட்சாகவும், பேஷனாகவும் இருக்கும்.
ஆக்சிடைஸ்ட் ஜூவல்லரி
2024ல் மிகச்சிறந்த ஜூவல்லரி டிரெண்ட் ஆக்சிடைஸ்ட் வெள்ளி ஜூவல்லரிகளே. தனித்துவமான விண்டேஜ் பாணி கொண்ட இந்த நகைகளை, குர்தா, சல்வார், அனார்க்கலி போன்ற எத்தினிக் ஆடைகளுடன் மேட்ச் செய்யலாம். மார்டன் டிசைன் சிம்பிள் ஜூவல்லரிகளை, வெஸ்டர்ன் ஆடைகளுக்குஅணியலாம்.
லேயர் ஜூவல்லரி
பலவிதமான நகை பீஸ்களை ஒன்றாக இணைத்து கிரியேட்டிவாக செய்யப்படுவதே, லேயரிங் நகைகள். வெவ்வேறு ஸ்டைல், டெக்சர், வேலைப்பாடு என பல்வேறு பாணிகளை ஒன்றிணைத்து இந்த நகைகள் உருவாக்கப்படும். சேலை முதல் முதல் ஜீன்ஸ், வரை அனைத்து ஆடைகளுக்கும் ஏற்ற வித, விதமான டிசைன்களில் கிடைக்கிறது.