தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்த வாரம் ஆரவாரம் - எட்டு திக்கும் கண்காட்சி மயம்

இந்த வாரம் ஆரவாரம் - எட்டு திக்கும் கண்காட்சி மயம்

இந்த வாரம் ஆரவாரம் - எட்டு திக்கும் கண்காட்சி மயம்


UPDATED : அக் 08, 2026 06:50 PM

ADDED : அக் 08, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:50 PM ADDED : அக் 08, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. மெகா மலர் கண்காட்சி



மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெகா மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.இடம்: சி.ஐ.டி. கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு.தேதி: செப்.10 முதல் அக்.20 வரை.

2. துபாய் கண்காட்சி



துபாய் மிரக்கிள் கார்டன் கண்காட்சி நடக்கிறது. இதில் வண்ணமயமான மலர் அலங்காரங்கள், கண்ணைக் கவரும் தோட்ட வடிவமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங், உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.இடம்: வ.உ.சி. மைதானம்.தேதி: செப்.19 முதல் அக்.20 வரை

3. கைவினை கண்காட்சி



மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட் மற்றும் ரூட் கலா சார்பில் இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலையைப் பறைசாற்றும் “ஹஸ்தகலா” கண்காட்சி நடக்கிறது. இதில் கைத்தறி சேலைகள், பாரம்பரிய ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம்.இடம்: சுகுணா திருமண மண்டபம், அவிநாசி சாலை, பீளமேடு.தேதி: அக். 2 முதல் 11 வரை

4. ஓவிய கண்காட்சி



கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை சார்பில் மதினிரை செல்வன் படைப்புகளின் ‘‘வைபரேஷன் ஆப் கலர்ஸ்’’ ஓவியக் கண்காட்சி நடக்கிறது. இடம்: கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரி, அவிநாசி சாலை.தேதி: அக்.11 முதல் 17 வரை

5. பிராபர்ட்டி கண்காட்சி



துபாயில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சொத்து கண்காட்சி ‘துபாய் பிரபர்ட்டி எக்ஸ்போ’ நடக்கிறது. ரூ.2 கோடி முதல் சொத்துகள் கிடைப்பதுடன், முதலீட்டின் மூலம் கோல்டன் விசா பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இடம்: லீ மெரிடியன், நீலாம்பூர்.தேதி: அக்.10, 11

6. நகைச்சுவை நிகழ்ச்சி



கோவை நகைச்சுவை சங்கம் சார்பில் 33-வது நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. புலவர் இராமலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். “சிரிப்பின் சிறப்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடக்கிறது.இடம்: ஹிந்துஸ்தான் கல்லுாரி, நவஇந்தியா.தேதி: அக்.11

7. ஸ்டேன்ஜர்ஸ் மீட்



அந்நியர்களை சந்தித்து புதிய நட்புகளையும் தொடர்புகளையும் உருவாக்கும் வகையில் ஸ்டேன்ஜர்ஸ் மீட் என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் உரையாடல்கள், பொழுதுபோக்கு, நெட்வொர்க்கிங் விளையாட்டுகள், தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.இடம்: உக்கடம்தேதி: அக்.11

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us