UPDATED : அக் 29, 2026 10:59 PM
ADDED : அக் 29, 2026 10:54 PM
1. ஸ்பூக்கி ஹாலோவீன் ரைடு
பெடல் பீப்பிள் சார்பில் ‘ஸ்பூக்கி ஹாலோவீன் ரைடு’ என்ற ஹாலோவீன் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சைக்கிள் பயணம், பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
2. இசை நிகழ்ச்சி
இடம்: ரேஸ் கோர்ஸதேதி: நவ.1: ஸ்ட்ரம்ஸ் என் ஹம்ஸ் சார்பில், ‘ஹூக்கும் மோட் ஆன்’ இசை நிகழ்ச்சி நடக்கிறது. புரோசோன் மாலில் உள்ள பிரதான அரங்கில் மாலை 5 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பாடல்களைப் பாடி மகிழும் வகையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.
3. ஓவியப் போட்டி
இடம்: புரோசோன் மால்.தேதி: நவ.1: தயா வென்ச்சர்ஸ், ஸ்டேஜ் 3 எக்ஸிபிஷன்ஸ் சார்பில், ‘கோவை ஹோம்பெஸ்ட்’ கண்காட்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்கள் ஓவியத் திறமைகளை வெளிப்படுத்தலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இடம்: சுகுணா திருமண மண்டபம், அவினாசி சாலை, பீளமேடு. தேதி: அக்.30 முதல் நவ.1- வரை
4. தீபாவளி பஜார்
ட்விங்கிள் டவுன், அப்டவுன் கான்பெட்டி சார்பில், ‘தீபாவளி பஜார் 2026’ என்ற பெயரில் சிறப்பு ஷாப்பிங் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியில் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம்: அர்பன் சென்டர், லட்சுமி மில்ஸ். தேதி: அக்.31, நவ.1
5. ஸ்ட்ரேஞ்சர்ஸ் தீபாவளி நைட்
தீபாவளியை முன்னிட்டு, புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் பழகவும், நட்பு வட்டத்தை விரிவுபடுத்தவும், விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் தீபாவளி நைட்’ நிகழ்ச்சி நடக்கிறது.
இடம்: வூப் ஹெவன் டர்ப், சரவணம்பட்டிதேதி: அக் 31
