தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்தவாரம் ஆராவாரம்

இந்தவாரம் ஆராவாரம்

இந்தவாரம் ஆராவாரம்


UPDATED : நவ 26, 2026 06:30 PM

ADDED : நவ 26, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:30 PM ADDED : நவ 26, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திரைப்படம் சிறப்பு திரையிடல்



கோவை தினத்தை முன்னிட்டு ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ‘ஜி.டி.என். – தி எடிசன் ஆப் இந்தியா’ திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்படுகிறது. ஜிடி குழுமம் மற்றும் தி அட்வர்டைசிங் கிளப் சார்பில் நடைபெறுகிறது.

இடம்: பி.வி.ஆர்.சினிமாஸ், புரூக்பீல்ட்ஸ் மால்.தேதி: நவ.30

இலக்கிய சொற்பொழிவு



பி.எஸ்.ஜி. அறநிலையம் சார்பில் சமுதாயநல மேம்பாட்டிற்காக நடத்தப்படும் ‘பி.எஸ்.ஜி. வானவில்’ 99-வது மாத நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திருச்சி தேசியக்கல்லுாரி இனை பேராசிரியர் நீலகண்டன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.

இடம்: பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு.தேதி: நவ.28

பள்ளி ஆண்டு விழா



மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் ஆண்டு விழா ‘வர்ணம்’ நடக்கிறது. இதில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இடம்: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு.தேதி: நவ.27

ஆன்மிக சொற்பொழிவு



ஆத்ம வித்யாலயம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு, சிறப்பு அருளுரை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆன்மீக சொற்பொழிவும், சுவாமி சங்கரானந்தா வழங்கும் சிறப்பு அருளுரையும் நடைபெற உள்ளன.

இடம்: ஆத்ம வித்யாலயம், ஆத்ம ஞான சபை, ராமநாதபுரம்.தேதி: நவ.27

கருத்தரங்கம்



கோவை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ‘மாத்தியோசி’ கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிமணியின் இன்னொரு பக்கம் என்ற தலைப்பிலும், மாத்தியோசி என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறது.

இடம்: ஈப்பன் இல்லம், பவர் ஹவுஸ் அருகில், கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் எதிரில், டாடாபாத்.தேதி: நவ.27

பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ



மீடியா டே மார்க்கெட்டிங் சார்பில் 2-வது பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ 2026, 2-வது வேஸ்ட்டெக் இந்தியா கண்காட்சிகளின் துவக்க விழா நடக்கிறது.

இடம்: கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகம், அவிநாசி ரோடு.தேதி: நவ.27

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us