ADDED : செப் 03, 2026 06:41 PM
1. ஒலிம்பியன் சர்க்கஸ் வெளிநாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ் கோவையில் நடக்கிறது. இந்த சர்க்கஸில் பபுள்ஷோ, ஜக்லிங், சைக்கிளிங், லேசர்மேன் காமெடி கிளவுன், ஏரியல் அண்ட் பாலன்சிங் ஆக் என, பல சுவராஸ்யமான காட்சிகள் இந்த சர்க்கஸில் இடம் பெற்றுள்ளன. குடுப்பத்துடன் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சர்க்கஸ்.
இடம்: மாநகராட்சி கலையரங்கம்: 2. தீபாவளி ஷாப்பிங் தமாகா தீபாவளியை முன்னிட்டு, கோவையில் தீபாவளி ஷாப்பிங் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று ஷாப்பிங் செய்து பயன்பெறலாம்.
இடம்: கொடிசியா வர்த்தக வளாகம்:
3. ஜன்மாஷ்டமி தி கோவை வே ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கோவையில் உரியடி, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பசு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு இலவச குளிர்பானங்கள் வழங்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இடம்: சிறுவாணி மெயின் ரோடு.தேதி: செப்.: 4. துணி பொம்மை தயாரிக்கும் பயிற்சி ‘தாரா டால்’ துணி பொம்மை தயாரிக்கும் பயிற்சி பட்டறை நடக்கிறது. இந்த பயிற்சியில் திறமையான கைவினைக் கலைஞர்களிடம் இருந்து பொம்மை தயாரிப்பதை கற்றுக்கொள்ளலாம். பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்படுவதுடன், பொம்மைக்கான ஆடையும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் தாங்களே தயாரித்த தாரா பொம்மையை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
இடம்: சிவாஞ்சலி கபே அண்ட் கிராப்ட்ஸ்:
5. கைத்தறி கண்காட்சி வீவ்ஸ் இந்தியா சார்பில் கைத்தறி ஜவுளி கண்காட்சி நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களின் கைத்தறி பட்டு மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய புடவைகள், ஆடைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. நெசவாளர்களிடமிருந்து நேரடியாக பட்டு பொருட்களை வாங்கும் வாய்ப்பும் உள்ளது. அனுமதி மற்றும் பார்க்கிங் இலவசம்.
இடம்: சுகுணா திருமண மண்டபம்: தேதி: செப்.:
6. ஹேண்ட்பிரஸ்டு பாட்டரி, ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட் அப் ‘ஹேண்ட்பிரஸ்டு பாட்டரி, ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட் அப்’ நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஹேண்ட்பிரஸ்டு பாட்டரி நிகழ்ச்சியில் மண் பாண்டங்கள் செய்யும் கலையை கற்கலாம். ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட் அப் நிகழ்ச்சியில் புதிய நபர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு உள்ளது. கலை மற்றும் புதிய அனுபவங்களை விரும்புபவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
இடம்: டி கம்யூன்: 7. இலக்கிய சந்திப்பு இலக்கிய சந்திப்பு 275-வது நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அய்யப்ப மாதவனின் கூந்தலில் செய்த தாரிகை என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் குறித்து சிறப்புரை நடைபெறுகிறது. ந.பெரியசாமி எழுதிய அகப்பிளவு கவிதைத் தொகுப்பு அறிமுகமும், பாடல்கள்–கவியரங்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இடம்: தாமஸ் கிளப்:
