ADDED : செப் 24, 2026 06:21 PM
1. மெகா மலர் கண்காட்சி மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் இடம்பெற்றுள்ள மெகா மலர் கண்காட்சி. குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.
இடம்: சி.ஐ.டி. கல்லுாரி எதிரே உள்ள மைதானம்:
2. துபாய் கண்காட்சி மிராக்கிள் கார்டன் கண்காட்சி. வண்ணமயமான மலர் அலங்காரங்கள், கண்ணைக் கவரும் தோட்ட வடிவமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங், உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
இடம்: வ.உ.சி. மைதானம்.தேதி: செப்.19 முதல் அக்.20 வரை: 3. நகைச்சுவை நாடகம் கெரி கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்காக ‘சாக்லேட் கிருஷ்ணா’ தமிழ் நகைச்சுவை நாடகம் நடக்கிறது. மாது பாலாஜி மற்றும் குழுவினர் வழங்கும் இந்நாடகத்துடன், மாது பாலாஜியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அனுமதி இலவசம்
இடம்: கெரி கேர் கிளினிக்:
4. மியூசிக் நைட்
ஜுவல் ஒன் சார்பில் ‘மியூசிக் நைட்’ இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடகர்கள் ஸ்ரிதர்சனா, ஸ்ரீநேஷா, லைனெட், பிரியங்கா, பரத் உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சி வழங்க உள்ளனர். சிறப்பு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம்.
இடம்: ரத்தினம் கல்லுாரி:
5.பெயின்டிங் பயிலரங்கம்
டிரிங்க்லெட் பிக்னிக், டிரே பெயின்டிங் பயிலரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் தங்களுக்கான டிரேயை தாங்களே வரைந்து, விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்கும் வகையில் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
இடம்: கேபே ஜூன்-:
6. தற்காப்பு பயிற்சி ‘கோர் அண்ட் காம்பாட்’ தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சி 2-ம் பதிப்பு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 30 நிமிட மேட் பைலேட்ஸ், 90 நிமிட தற்காப்புப் பயிற்சி இடம்பெறுகிறது.
இடம்: ஸ்போர்ட்ஸ் ஹைவ்-ல்:
