தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்த வாரம் ஆரவாரம்

 இந்த வாரம் ஆரவாரம்

 இந்த வாரம் ஆரவாரம்


ADDED : மே 29, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வைகாசி விசாக பெருவிழா - ஆறுமுகக் கடவுள் அவதரித்த திருநாள் வைகாசி விசாகம். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப் பொறிகளை தோற்றுவித்தார். அவை வாயு, அக்னி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்காதேவி அவற் றைச் சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தாள், ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவரித்தன. இந்த தினமே வைகாசி மாதத்து விசாக நாளாகும். இந்த திருநாளில் வெற்றி வேலனை வழிபட்டு நன்மை கிடைக்கும். இந்த வைகாசி விசாக பெருவிழா,- திருப்புகழ் இசை வழிபாடு கோவையில் நடக்கிறது.

இடம் : ஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவில் கூரியோ கார்டன்: நேரம்: காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை.: வீணை இசை கோவையில், வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசை பிரியர்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி நல்ல இசை விருந்தாக அமையும். பார்வையாளர்களுக்கு கட்டணம் உண்டு. இடம்: ஆர்.எஸ்.புரம் மாருதி கானசபா தேதி: 29, நேரம்: மாலை 6:00 மணி. விளையாட்டு மைதானம் திறப்பு

ஊரகக் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர்.ஆறுச்சாமி சார்பாக, புதிதாக நிறுவப்பட்ட கைப்பந்து மைதான தொடக்க விழா நடக்கிறது.

இடம்: ஆர்.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி: யமுனா நகர்: தேதி: 29 நேரம்: மாலை 6:00 மணி: மெல்லிசை கச்சேரி கோவையில் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சினிமா பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் வெஸ்ட் சார்பில், பின்னணி பாடகர் எஸ்.பி.சரண், பாடகிகள் பிரியங்கா, ஸ்ரீநிஷா ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புக் மை ஷோவில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இடம்: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானம். தேதி: 30, மாலை 6:00 மணி. நுால் வெளியீடு

வாகை வசாகர் வட்டம் மற்றும் சோமந்துறை மயில்மணி அறிக்கட்டளை இணைந்து நடத்தும் 'இன்னும் ஏன் எழவில்லை எப்போது விழிப்பீர்' என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் விஜயராகவன் நுாலை வெளியிட, கவிஞர்கள் அரங்ககோபால், கலையரசன், தம்பித்துரை உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்குகின்றனர். இடம்: சுந்தராபுரம், இடையர்பாளையம் கிளை நுாலகம். தேதி: 31, காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us