தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொல்குடி திட்டம்: 69 பேர் தேர்வு

தொல்குடி திட்டம்: 69 பேர் தேர்வு

தொல்குடி திட்டம்: 69 பேர் தேர்வு


ADDED : ஆக 31, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தொல்குடி திட்டத்தின் கீழ்  சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. நான்கு நிதியாண்டுகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளில் ரோடு, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை பகுதிகளில் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சென்ற நிதியாண்டில் 194 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் சிறுமுகை, தொண்டாமுத்தூர், ஆலந்துறை, ஓடையகுளம் மற்றும் வேட்டைக்காரன்புதுாரில், 69 பேர் வீடு கட்டும் திட்டத்துக்கு தேர்வாகியுள்ளனர். விண்ணப்பங்கள் ஒப்புதலுக்கு சென்றுள்ளன. நிதி ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us