/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முள்ளி வழியாக கேரளா செல்ல வந்தோர் திருப்பி அனுப்பப்பட்டனர்
/
முள்ளி வழியாக கேரளா செல்ல வந்தோர் திருப்பி அனுப்பப்பட்டனர்
முள்ளி வழியாக கேரளா செல்ல வந்தோர் திருப்பி அனுப்பப்பட்டனர்
முள்ளி வழியாக கேரளா செல்ல வந்தோர் திருப்பி அனுப்பப்பட்டனர்
ADDED : ஜன 14, 2025 10:08 PM
மேட்டுப்பாளையம்:
பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறைக்காக முள்ளி வழியாக கேரளா செல்ல வந்த வாகனங்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முள்ளி, தமிழகம் கேரளா எல்லைப்பகுதி ஆகும். முள்ளியில் தமிழகம் மற்றும் கேரளா என இருமாநிலங்களின் வனத்துறை சார்பில் செக்போஸ்ட் உள்ளது.
முள்ளி மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இருமாநிலங்களிடையே முள்ளி வாயிலாக போக்குவரத்து இருந்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முள்ளி செக் போஸ்ட் கோவை மாவட்ட வனத்துறையால் மூடப்பட்டது.
வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு போன்ற காரணங்களினால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செக் போஸ்ட் வழியாக தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் செக்போஸ்ட் வழியாக கேரளாவின் புதூர் பகுதி மக்களும், தமிழகத்தின் முள்ளி, குண்டூர், பில்லூர் அணை பகுதி மக்கள் என உள்ளூர் கிராம மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். முள்ளி செக் போஸ்ட் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டியையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, முள்ளி வழியாக கேரள மாநிலம் அட்டப்பாடி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வாகனங்களில் வந்த பலரும் வனத்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் கோபனாரி வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றுலா பயணிகள் கேரள சென்றனர்.
இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், முள்ளி செக்போஸ்ட்டில் உள்ளூர் மக்கள் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய தேவைகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
மேப் செயலிகளை நம்பி இங்கு வர வேண்டாம். அனுமதி கிடையாது.
வெள்ளியங்காடு அருகே உள்ள பில்லூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள செக்போஸ்ட்டில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பலரும் மஞ்சூர் வழியாக ஊட்டி செல்வதாக கூறி முள்ளி வழியாக கேரளா செல்ல முயல்கின்றனர், என்றனர்.