/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோண்டத் தெரிந்தவர்களுக்கு மூடத்தெரியவில்லையே! 55வது வார்டு ராமானுஜம் நகரில் பொதுமக்கள் அவஸ்தை
/
தோண்டத் தெரிந்தவர்களுக்கு மூடத்தெரியவில்லையே! 55வது வார்டு ராமானுஜம் நகரில் பொதுமக்கள் அவஸ்தை
தோண்டத் தெரிந்தவர்களுக்கு மூடத்தெரியவில்லையே! 55வது வார்டு ராமானுஜம் நகரில் பொதுமக்கள் அவஸ்தை
தோண்டத் தெரிந்தவர்களுக்கு மூடத்தெரியவில்லையே! 55வது வார்டு ராமானுஜம் நகரில் பொதுமக்கள் அவஸ்தை
ADDED : மே 04, 2025 10:54 PM

தோண்டினார்கள்... மூடவில்லை
உப்பிலிபாளையம், 55வது வார்டு, கபிலன் கார்டன், ராமானுஜம் நகர் கிழக்கில், பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. கடந்த பத்து நாட்களாக எந்த பணியும் செய்யவில்லை. சாலையை பயன்படுத்த முடியாமல், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சுதாகரன், கணபதி.
கடும் துர்நாற்றம்
சரவணம்பட்டி, சிவானந்தபுரம், 14வது வார்டு, எஸ்.ஆர்.பி., மில்ஸ் பகுதியில், சாலையோரம் தொடர்ந்து சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். வாரக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சுதாகரன், சரவணம்பட்டி.
புகார் செய்தும் பலனில்லை
கணபதி, 20வது வார்டு, சுபாஷ் நகர், உப்பு தண்ணீர் குழாய் உடைந்துள்ளது. குழாய் உடைப்பால் கழிவுநீரும், தண்ணீருடன் கலந்து வருகிறது. இதனால், உப்பு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு, குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
- ஜோனத்தன், கணபதி.
மறைக்கும் விளம்பர பதாகை
வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோட்டில், அஜ்ஜனுார் ரோடு சந்திப்பில், பெரிய விளம்பர பலகைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன. விளம்பர பதாகைகள், வளைவில் வரும் வாகனங்களை மறைக்கின்றன. வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள இவற்றை, அகற்ற வேண்டும்.
- சுரேஷ், வடவள்ளி.
குழிகளால் விபத்துகள்
இடையர்பாளையம், அருண் நகரில், குழாய் சீரமைப்பு பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. மூன்று மாதங்களுக்கு மேலாகியும், குழிகளை மூடவில்லை. இரவு நேரத்தில், குழிகளால் அதிக விபத்து நடக்கிறது. குழி தோண்டிய மண்ணையும், சாலையில் குவித்துள்ளனர்.
- ராஜேஷ், இடையர்பாளையம்.
கழிவுகளால் துர்நாற்றம்
பீளமேடு, 52வது வார்டு, தாமோதரசாமி நகரில், காலி சைட்டில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. அதிகளவு தேங்கியுள்ள குப்பையால், அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. இப்பகுதியை சுத்தம் செய்து, மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், பீளமேடு.
கழிவுநீர் தேக்கம்
போத்தனுார், தாயம்மாள் லே-அவுட், உழவர் சந்தை கேட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு நிரம்பியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகளவு உள்ளது.
- பழனிச்சாமி, போத்தனுார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
சங்கனுார் முதல் நல்லாம்பாளையம் ரோடு, லட்சுமி நகர், மூன்றாவது வீதி விரிவாக்கம் பகுதியில், புது சுப்பம்மாள் வீதி, 18வது வார்டில், தெருவிளக்கு மற்றும் சாலை வசதியில்லை. இரவு நேரங்களில் சாலையோரம் மறைவில் அமர்ந்து, சிலர் மது அருந்துகின்றனர். இதனால், இரவு நேரங்களில், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
- நாகராஜ், சங்கனுார்.
உடைந்த சிலாப்புகள்
வரதராஜபுரம், காமராஜர் பிரதான சாலையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பேருந்து நிறுத்தம் எதிரில், நடைபாதை சிலாப் உடைந்த நிலையில் உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லும் போது கால் இடறி கீழே விழுகின்றனர்.
- சுப்பிரமணியம், வரதராஜபுரம்.
திறந்தவெளியில் கழிவுநீர்
இடையர்பாளையம் பிரிவு, 93வது வார்டு, மணிகண்டன் நகர் இறுதியில், சர்ச் வீதிக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் திறந்தவெளியில் செல்கிறது. இந்தப்பாதையில் நடக்கவே முடியவில்லை. குழிகளில் தேங்கி நிற்கும் நீரில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
- ரோகிணி,
மணிகண்டன் நகர்.