ADDED : அக் 04, 2024 10:19 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் கோட்டை பிரிவு ரயில்வே பாலம் அருகே நடந்து சென்ற நபரிடமிருந்து மொபைல் போன் பறித்து சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவியரசன், 29; தற்போது மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையத்தில் வசிக்கிறார். இவர் கோட்டை பிரிவு ரயில்வே பாலம் அருகே மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர் கவியரசனிடம் இருந்து மொபைல் போனை பறித்து சென்றனர். சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சிக்காரம்பாளையம் சரவணகுமார்,19, இடிகரை மணிகாரம்பாளையம் செந்தில்குமார், 24, கன்னார்பளையம் சூர்யா, 22, ஆகியோரை போலீசார் கைது செய்து, பறித்து சென்ற மொபைல் போனை கைப்பற்றினர்.