/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அக்னி வீரர்' ஆக ஆசைப்படுபவர்கள் இந்திய ராணுவத்தில் இணையலாம்
/
'அக்னி வீரர்' ஆக ஆசைப்படுபவர்கள் இந்திய ராணுவத்தில் இணையலாம்
'அக்னி வீரர்' ஆக ஆசைப்படுபவர்கள் இந்திய ராணுவத்தில் இணையலாம்
'அக்னி வீரர்' ஆக ஆசைப்படுபவர்கள் இந்திய ராணுவத்தில் இணையலாம்
ADDED : மார் 26, 2025 10:24 PM
கோவை:
கோவையிலுள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தில், இந்திய ராணுவத்தின் அக்னிவீர் பிரிவில், ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சுல் வர்மா அறிக்கை:
கோவை. திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், அக்னிவீர் பிரிவில் சேரலாம். விண்ணப்பிக்க ஏப்., 10 கடைசி நாளாகும்.
இந்த இணைய முகவரியில், www.joinindianarmy.nic.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில் நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி ஆகிய பிரிவுகளுக்கு, 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களும், மற்றொரு பிரிவு அக்னிவீர் தொழிலாளிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இரு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்.சி.சி., ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நுழைவுத்தேர்வு, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும்.
ஆன்லைனில் பொதுத்தேர்வு நடைபெறும். அதன் பின், ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு முறை, முற்றிலும் திறமையை அடிப்படையாக கொண்டது. மேலும் விபரங்களுக்கு, www.joinindianarmy.nic.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.