தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேலைவாய்ப்புடன் தாட்கோ திறன் பயிற்சி

 வேலைவாய்ப்புடன் தாட்கோ திறன் பயிற்சி

 வேலைவாய்ப்புடன் தாட்கோ திறன் பயிற்சி


ADDED : ஜூன் 16, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தாட்கோ சார்பில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மணப்பெண் ஒப்பனைக்கலை மற்றும் நவீன சிகை அலங்காரம், ரசாயன சிகிச்சை ஆகிய பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் பயிற்சியில் சேரலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

திருச்சியில் 45 நாட்கள் நடக்கும் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் தங்குமிடம் மற்றும் பயிற்சி தொடர்பான செலவுகளை தாட்கோ ஏற்கும்.

பயிற்சியை முடிப்பவர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us