/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆயிரம் ரூபாய் திட்டம் விரிவுப்படுத்த திட்டம்'
/
'ஆயிரம் ரூபாய் திட்டம் விரிவுப்படுத்த திட்டம்'
ADDED : பிப் 03, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை பீளமேடு பகுதியில் உள்ள, கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி சைக்கிள்களை வழங்கினார்.
இதில், அவர் பேசுகையில், ''உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாணவிகளுக்கு, மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும், விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது,'' என்றார்.
கலெக்டர் கிராந்திகுமார், பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புனிதா, பள்ளி தலைமையாசிரியர் சவுந்தரராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

