/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
/
அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
ADDED : ஜன 18, 2026 04:58 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட வன எல்லை பகுதி யான வித்தனச்சேரியில் சமீபமாக சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாய், ஆடு, மாடு, கோழிகளை கவ்வி சென்றுள்ளது.
பீதியடைந்த அப்பகுதி மக்கள், நெல்லியாம்பதி வனத்துறையிடம் புகார் அளித்தனர்.
வனத்துறையினர், அங்குள்ள நெல்லிப்பாடம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர்.
நேற்று அதிகாலை, வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
நெல்லியாம்பதி வனத்துறை அதிகாரி ஷெரீப் கூறுகையில், ''நான்கரை வயதுள்ள ஆண் சிறுத்தை, கூண்டில் சிக்கி உள்ளது. அதை, பரம்பிக்குளம் வன அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை செய்து, உடல்நல பாதிப்பு ஏது மில்லை என உறுதியானதும், பரம்பிக்குளம் வனத்தில் விடுவிப்போம்,'' என்றார்.

