/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடிக்கையாளருக்கு மிரட்டல் ;வங்கி மேலாளர் மீது வழக்கு
/
வாடிக்கையாளருக்கு மிரட்டல் ;வங்கி மேலாளர் மீது வழக்கு
வாடிக்கையாளருக்கு மிரட்டல் ;வங்கி மேலாளர் மீது வழக்கு
வாடிக்கையாளருக்கு மிரட்டல் ;வங்கி மேலாளர் மீது வழக்கு
ADDED : செப் 27, 2025 01:10 AM
கோவை; கோவை, சிவில் ஏரோடிரோம், வித்யா நகரை சேர்ந்தவர் பிரஜித் குமார்,29. வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், காளப்பட்டி ரோட்டில் உள்ள இண்டஸ் இண்ட் வங்கியில் கணக்கு துவக்கி, பரிவர்த்தனை செய்து வருகிறார்.
அவரது வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்வதில் பிரச்னை ஏற்பட்டதால், வங்கி மேலாளரை சந்திக்கச் சென்றார். முறையான பதிலளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக மேலாளர் பேசியுள்ளார். 'என் மீது எந்த புகாரும் இல்லை; எதற்காக கணக்கை முடக்கி வைத்தீர்கள்' என்று பிரஜித்குமார் கேட்டபோது, வங்கி மேலாளர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
மேலதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக கூறி, வங்கியில் இருந்து அவர் புறப்பட்டபோது, வங்கி வளாகத்தில் இருந்த, 5க்கும் மேற்பட்ட நபர்கள் சூழந்து கொண்டு, அவரை தாக்கினர்.
கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக, பிரஜித்குமாரை மிரட்டினர். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்ததை தொடர்ந்து, வங்கி கிளை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.