/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திமாநகரில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய மூவர் கைது
/
காந்திமாநகரில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய மூவர் கைது
காந்திமாநகரில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய மூவர் கைது
காந்திமாநகரில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய மூவர் கைது
ADDED : செப் 30, 2025 11:00 PM
கோவை; காந்தி மாநகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. 23ம் தேதி காலை நடைபயிற்சிக்கு வந்த சிலர், பூங்காவில் இருந்த ஐந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பல மரங்கள் பாதி அறுக்கப்பட்ட நிலையில் இருந்தன. சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தன மரங்களை வெட்டிக்கடத்தியவர்களை தேடினர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி, 37, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரும், திண்டுக்கலை சேர்ந்த பாக்யராஜ், 26, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த தேக்கமலை, 31 ஆகியோருடன் சேர்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி விற்றது கண்டறியப்பட்டது. மூவரை யும் கைது செய்து விசாரிக்கின்றனர்.