/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம்.,ல் நிரப்ப கொடுத்த பணத்தை 'பாக்கெட்டில்' நிரப்பிய மூவர் கைது
/
ஏ.டி.எம்.,ல் நிரப்ப கொடுத்த பணத்தை 'பாக்கெட்டில்' நிரப்பிய மூவர் கைது
ஏ.டி.எம்.,ல் நிரப்ப கொடுத்த பணத்தை 'பாக்கெட்டில்' நிரப்பிய மூவர் கைது
ஏ.டி.எம்.,ல் நிரப்ப கொடுத்த பணத்தை 'பாக்கெட்டில்' நிரப்பிய மூவர் கைது
ADDED : அக் 26, 2024 06:36 AM
கோவை: கோவை, ராமநாதபுரம் பகுதியில், வங்கிகளில் இருந்து பணம் பெற்று ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிறப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த பிரதீப், 36 மேலாளராக உள்ளார்.
கடந்த, 3ம் தேதி திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக, ரூ. 1.2 கோடி பணத்தை, சீல் வைத்த பெட்டியில் வைத்து பிரதீப் கொடுத்துள்ளார். பல்வேறு ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிரப்பியுள்ளனர். திருப்பூர் பூண்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப சென்ற போது, அங்கு நெட்வொர்க் கோளாறு ஏற்பட்டதால், ரூ. 15 லட்சம் பணத்தை பெட்டியில் வைத்து, திருப்பி அனுப்புவதாக மேலாளரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பணம் எடுத்து சென்ற வாகனம் திரும்பி வந்தவுடன், நிறுவன ஊழியர்கள் கேமரா பதிவுடன் பணத்தை எடுத்து சரிபார்த்தனர்.
அதில் ரூ. 5 லட்சம் குறைவாக இருந்துள்ளது. பிரதீப் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்கள் திருப்பூரை சேர்ந்த சாமுவேல், 25, இருகூரை சேர்ந்த ரமேஷ், 43 மற்றும் கணபதியை சேர்ந்த கிரிட்டன், 65 ஆகியோர், பணத்தை கையாடல் செய்தது தெரிந்தது. போலீசார் அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.