/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.10 லட்சம் மோசடி: மூவர் சிறையிலடைப்பு
/
ரூ.10 லட்சம் மோசடி: மூவர் சிறையிலடைப்பு
ADDED : நவ 06, 2025 11:23 PM
கோவை: பெண்ணிடம் ஆன்லைன் மூலம், ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும், பெண்ணுக்கு மொபைல்போனில் தகவல் வந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பெண் அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய நபர், தாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பெண், பல்வேறு தவணைகளாக, ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், அந்நபர் கூறியது போல் லாபம் மற்றும் அசலை தரவில்லை. இதுகுறித்து அப்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திருவள்ளூரை சேர்ந்த ராஜூ, 41, முகமது அனீப், 44, அவர் மனைவி அன்னு, 34 ஆகிய மூவரும் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இந்நிலையில், இவர்களை தென்காசி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தென்காசிக்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் அவர்களை கோவைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

