நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில், கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக, சிலர் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.
இதில், கோவிந்தநாயக்கனூரைச் சேர்ந்த செல்வகுமார், 45, காளிமுத்து, 50, மற்றும் சொக்கனூரைச் சேர்ந்த ஜெயக்குமார், 45, ஆகிய மூவரிடமும், தலா 10 லிட்டர் வீதம், மொத்தம், 30 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.