/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது; 8 கிலோ பறிமுதல்
/
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது; 8 கிலோ பறிமுதல்
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது; 8 கிலோ பறிமுதல்
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது; 8 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 22, 2025 12:38 AM
கோவை; அசாமில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மூவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம், அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் ரயில், கோவை ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு பெட்டி ஒன்றில் இருந்த, 17 வயது சிறுவன் உட்பட மூவரின் பைகளை சோதனை செய்தனர். அதில், எட்டு கிலோ கஞ்சா இருந்தது.
அவர்கள் மூவரையும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலம் நாகோன் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், அபதுல் ஹக்கீம், 34 மற்றும் ஜியாபுர் ரகுமான் என்பதும், அவர்கள் அசாமில் இருந்து கஞ்சாவை கடத்தி கேரள மாநிலம் ஆலுவா பகுதிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த கஞ்சாவை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கஞ்சாவை கடத்தி வந்த மூவர் மற்றும் எட்டு கிலோ கஞ்சா ஆகியவற்றை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.