/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
41 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் மூவர் சிக்கினர்
/
41 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் மூவர் சிக்கினர்
41 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் மூவர் சிக்கினர்
41 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் மூவர் சிக்கினர்
ADDED : பிப் 23, 2026 05:57 AM
போத்தனுார்: கேரள மாநிலம், பட்டாம்பியை சேர்ந்தவர் லக்மன்,56; தங்க நகை தொழிலாளி. கடந்த 19ல் இவர் கோவையில், 200 கிராம் தங்க கட்டியை விற்று கிடைத்த ரூ.41 லட்சத்துடன், பைக்கில் கேரளா நோக்கி, சென்றார்.
நவக்கரை அருகே காரில் வந்த கும்பல். அவரை வழிமறித்து காரில் கடத்தியது. கேரள மாநிலத்திற்குள் வைத்து, ரூ.41 லட்சத்தை பறித்து தப்பியது.
லக்மன், க.க.சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார், கேரள போலீசாருடன் இணைந்து கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டது..
இதில், கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், செருவத்தூரை சேர்ந்த நிதின், 33, ஸ்ரீகுமார், 31 மற்றும் சுதீஷ், 39 ஆகியோர் சிக்கினர்.
இவர்களிடமிருந்து, ரூ.20 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்திய நிதினின் கார் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது.