ADDED : செப் 20, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தனியார் கல்லூரி பஸ் டிரைவரை, மது போதையில் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை அந்தியூரைச்சேர்ந்தவர் முருகேசன், 33. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மாணவர்களை பஸ்சில் அழைத்து செல்லும்போது, கூலநாயக்கன்பட்டி அருகே மது போதையில் பைக்கில் வந்த இளைஞர்கள் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி விட்டு தப்பியோடினர்.
இது குறித்து, கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். டிரைவரை தாக்கிய கூலநாயக்கன்பட்டியைச்சேர்ந்த கணேசன்,- 19, சதாசிவம்,- 23, ஜெயக்குமார்,- 23 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
