/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடு திருடிய திருநங்கைகள் உள்ளிட்ட மூவர் கைது
/
ஆடு திருடிய திருநங்கைகள் உள்ளிட்ட மூவர் கைது
ADDED : மே 02, 2025 09:13 PM
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அருகே ஆடு திருடிய இரு திருநங்கைகள் உள்ளிட்ட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் குட்டியப்பன்,30. ஆடு, மாடு வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஆடுகளை மேய்த்துவிட்டு, ஒரு இடத்தில் கட்டி வைத்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மூவர், ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசில், குட்டியப்பன் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் ஆடு திருடர்களை அடையாளம் கண்டனர்.
அதில், திரு நங்கைகளான சேடபாளையத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, 20, கவிதா, 27, மற்றும் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 18 ஆகியோர் ஆட்டை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.