/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை தடுப்பில் பைக் மோதி மூன்று மாணவர்கள் படுகாயம்
/
சாலை தடுப்பில் பைக் மோதி மூன்று மாணவர்கள் படுகாயம்
சாலை தடுப்பில் பைக் மோதி மூன்று மாணவர்கள் படுகாயம்
சாலை தடுப்பில் பைக் மோதி மூன்று மாணவர்கள் படுகாயம்
ADDED : அக் 25, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தேனி மாவட்டம், அல்லிநகரத்தை சேர்ந்த ராம்ஜி நாகப்பாண்டி,20, இவரது நண்பர்கள் நவீன் ,19, கரூர் பாப்பையன்பட்டியை சேர்ந்த சேஷாத்திரி,20, ஆகியோர் கோவையிலுள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.
ஒரே அறையில் தங்கியுள்ள மூவரும், நேற்று அதிகாலை கொடிசியா ரோட்டில் பைக்கில் சென்றனர். சாலை பணிக்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில், பைக் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.