/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ., மீது பைக் ஏற்றிய இருவருக்கு மூன்றாண்டு சிறை
/
எஸ்.ஐ., மீது பைக் ஏற்றிய இருவருக்கு மூன்றாண்டு சிறை
எஸ்.ஐ., மீது பைக் ஏற்றிய இருவருக்கு மூன்றாண்டு சிறை
எஸ்.ஐ., மீது பைக் ஏற்றிய இருவருக்கு மூன்றாண்டு சிறை
ADDED : ஜன 23, 2024 01:45 AM
கோவை;கோவை, பீளமேடு போக்குவரத்து பிரிவு போலீசார், 2017, ஜூலை, 18ல், அவினாசி ரோட்டில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சேலம், சங்ககிரி அருகேயுள்ள செட்டிபட்டியை சேர்ந்த ஜனார்த்தனன்,30, நாமக்கல் அருகேயுள்ள ராசிபுரத்தை சேர்ந்த கதிரவன்,28, ஆகியோரை நிறுத்தினர்.
குடிபோதையில் இருந்த இருவரும், பணியிலிருந்த போலீஸ் எஸ்.ஐ., பாபு மீது, பைக்கை மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.
புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கோவை நான்காவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி கலைவாணி, குற்றம் சாட்டப்பட்ட கதிரவன், ஜனார்த்தனன் ஆகியோருக்கு, தலா மூன்றாண்டு சிறை, தலா, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.

