sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளுக்கு இடையே த்ரோ பால் போட்டி; முதல் பரிசை தட்டிய கிருஷ்ணா வித்யாலயா

/

பள்ளிகளுக்கு இடையே த்ரோ பால் போட்டி; முதல் பரிசை தட்டிய கிருஷ்ணா வித்யாலயா

பள்ளிகளுக்கு இடையே த்ரோ பால் போட்டி; முதல் பரிசை தட்டிய கிருஷ்ணா வித்யாலயா

பள்ளிகளுக்கு இடையே த்ரோ பால் போட்டி; முதல் பரிசை தட்டிய கிருஷ்ணா வித்யாலயா


ADDED : ஜூலை 14, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான, த்ரோ பால் போட்டியில் கிருஷ்ணா வித்யாலயா அணி முதல் பரிசை தட்டி சென்றது.

பி.பி.ஜி., குழும நிறுவனத்தில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. இதில், வாலிபால் போட்டியில், 13 அணிகளும், த்ரோ பால் போட்டியில், 15 அணிகளும் பங்கேற்றன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் இடம்பெற்றன.

த்ரோ பால் முதல் அரையிறுதி போட்டியில், கிருஷ்ணா வித்யாலயா அணி, 15-7, 15-2 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணியையும், இரண்டாம் அரையிறுதியில் பிரசன்டேஷன் அணி, 15-4, 15-0 என்ற புள்ளிகளில், கீர்த்திமான் அணியையும் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

பரபரப்பான இறுதிப்போட்டியில், கிருஷ்ணா வித்யாலயா அணி, 15-9, 15-1 என்ற புள்ளி களில் பிரசன்டேஷன் கான்வென்ட் அணியை வென்று, முதல் பரிசை தட்டியது. கீர்த்திமான் அணியோ, 15-10, 8-15, 15-8 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணியை வென்று, மூன்றாம் பரிசை தட்டியது.

வாலிபால் லீக் போட்டியில், கிரசென்ட் அணி, 25-16, 25-23 என்ற புள்ளிகளில் எஸ்.ஆர்.எம்., அணியையும், குமுதா அணி, 25-12, 25-19 என்ற புள்ளிகளில் கீர்த்திமான் அணியையும், பெர்க்ஸ் அணி, 25-13, 25-8 என்ற புள்ளிகளில், குமுதா அணியையும் வென்றன.

கிரசென்ட் அணி, 25-13, 25-12 என்ற புள்ளிகளில் பெர்க்ஸ் அணியையும், கீர்த்திமான் அணி, 25-22, 25-22 என்ற புள்ளிகளில் எஸ்.ஆர்.எம்.,அணியையும், எஸ்.ஆர்.எம்., அணி, 25-11, 25-16 என்ற புள்ளிகளில், பெர்க்ஸ் அணியையும் வென்றன. அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us