ADDED : செப் 06, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில், உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீ வாரி மலையப்ப சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நேற்று கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சியும், வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர். -
