/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்நகர் ராமர் கோயிலில் தியாகராஜ உற்ஸவம்
/
ராம்நகர் ராமர் கோயிலில் தியாகராஜ உற்ஸவம்
ADDED : பிப் 03, 2026 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களைகவர்ந்தது.
கோவை, ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி சார்பில், 72ம் ஆண்டு தியாகராஜ உற்ஸவம், ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், கடந்த 31ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை நடந்த கோஷ்டி கானம், பஞ்சரத்னம் வியக்க வைத்தது.
நேற்று மாலை சுமித்ரா வாசுதேவ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராமகிருஷ்ணன் வயலின், மனோஜ் சிவா மிருதங்கம், புருஷோத்தமன் கஞ்ஜிரா இசைத்தனர். நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. நாளை நிகழ்ச்சி நிறைவடைகிறது.

